1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 28 மார்ச் 2024 (21:57 IST)

விஜய் கடைபிடிக்கும் புதிய டெக்னிக்!

விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்து வருகிறார். இப்பட ஷூட்டிங் கேரளாவில் நடந்து வருகிறது. இப்படத்தை அடுத்து,படக்குழு ரஷ்யா செல்லவுள்ளனர்.
 
விஜய் 69 படத்தில் நடிக்க  ஏன் இத்தனை யோசனை என்ற கேள்விகள் சினிமா ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
 
இப்படத்தை அடுத்து விஜய்69 படத்தை யார்  இயக்குவது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 
இப்படத்தை அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தன் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் கட்சித் தொண்டர்களை தயார்படுத்தவுள்ளார்.
 
இந்த நிலையில், இப்போது விஜய் புதிய டெக்னிக்கை கையாண்டு வருகிறாராம். 
 
அதன்படி, விஜயை அணுகி கதை சொல்லும் இயக்குனர்களிடம் நேரடியாக கதை சரியில்லை; அப்புறம் பார்க்கலாம்  என்று  அவர் கூறுவதில்லையாம். அதற்குப் பதிலாக அவர்களின் வாக்கு முக்கியம் என்பதற்காக  இடையில் ஒரு படம் செய்துவிட்டு வாருங்கள் என்று சொல்வதற்கு காரணம்... அவர்களின் ஓட்டு வேண்டும் என்பதும், அவர்களின் உறவினர்கள் நண்பர்களின் ஓட்டும் வேண்டும் என்ற காரணத்தினால்தான் என கூறப்படுகிறது.