வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 28 மே 2021 (21:41 IST)

விஜய் மகனுக்கு ஜோடியாக வேண்டும் - பிரபல சீரியல் நடிகை ஆசை !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் மாஸ்டர் படம் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்றது.  தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய்65 என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார்.

இந்நிலையில், பிரபல சீரியல் நடிகை ஒருவர் விஜய் மகனுடன் நடிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான நடிகைகள்   விஜய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டுமென்று ஆசையை வெளிப்படுத்தும் நிலையில்,  விஜய் டிவி உள்ளிட்ட சில தொலைக்காட்சிகளில் நடித்துவரும் பிரவீனா தாஹா விஜய்யின் மகன் சஞ்சய்க்கு ஜோடியாக வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.