வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 11 மே 2021 (20:55 IST)

நடிகர் விஜய் பட ஷூட்டிங் திடீர் நிறுத்தம்....ரசிகர்கள் அதிர்ச்சி ....

நடிகர் விஜய் தற்போது பெயரிடப்படாத ‘’விஜய்65 ’’என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் பட இயக்குநர் நெல்சன் இயக்கிவருகிறார். சுறா, சர்க்கார் படங்களை விஜய்யை வைத்து ஹயாரித்த சுன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துவருகிறது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இப்படத்தில், ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க பிரபல நடிகர் டைம் சாம் சேக்கோ நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இவர் மலையாள நடிகர் ஆவார். இவர் ஏற்கனவே கமல்ஹாசனிடன் உதவி இயக்குநராகப் பணியாற்றி நடிகரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய் 65 படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பிற்காக பிரமாண்ட செட் போடும் வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தமிழகத்தில் கொரொனா வைரஸின் இரண்டாம் அலை வேகமாகப் பரவிவருவதால், தமிழக அரசு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. எனவே விஜய்654 பட ஷூட்டிங் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு முடிந்தபிறகு இப்படப்பு மீண்டும் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.