திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 13 மே 2021 (20:27 IST)

இதுவரை எந்த நடிகையும் நடிக்காத கேரக்டரில் ''விஜய்65'' பட ஹீரோயின்

விஜய் 65 பட நடிகை பூஜா ஹெக்டே இதுவரை நடிக்காத ஒரு கேரக்டரில் நடித்துவருவதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் உருவாகிவரும் பெயரிடப்படாத விஜய் 65 படத்தில் நாயகியாக பூஜாஹெக்டே நடித்துவருகிறார். இவர் தெலுங்கு சினிமாவில் நம்பர் 1 நடிகையாவார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கிவருகிறார்.

இந்நிலையில், பூஜாஹெக்டே நடித்துவரும் இரண்டு தெலுங்குப் படங்களான பிரபாஸ் ஜோடியாக நடிக்கும்  ராதே ஷ்யாம் மற்றும் நாகார்ஜூனா நடிப்பில் உருவாகிவரும் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் ஆகிய இரண்டு படங்களிலும் இதுவரைஎந்தவொரு நடிகைகளும் நடிக்காதா கேரக்டரில் பூஜா ஹெக்டே நடித்துவருவதாகத் தகவல் வெளியாகிறது.

மேலும் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் என்ற படத்தில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.  இதுகுறித்து சமீபத்தில் அவர் கூறும்போது, ஸ்டாண்ட் அப் காமெடியனாக நடிக்கும்போது, நீளமான வசனங்களை ஒரே டேக்கில் பேசி நடிக்க வேண்டியதிருந்தது.அது சவாலாக எடுத்துக்கொண்டு நடித்தேன் எனத் தெரிவித்துள்ளார். இதனால் இவரது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.