செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (13:17 IST)

’கோட்’ ரிலீஸ்.. கட்சியின் முதல் மாநாடு: சீரடி சாய்பாபா கோயிலுக்கு செல்லும் விஜய்

தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இவை இரண்டும் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காக சீரடி சாய்பாபா கோவிலுக்கு விஜய் சென்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சீரடி புறப்பட்டார் என்றும் அவரது வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அடுத்த வாரம் ’கோட்’ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு அடுத்த மாதம் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று விஜய் சாமி தரிசனம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
விஜய்யின் ஆன்மீக பயணத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடன் சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது. ரஜினிகாந்த், அஜித் உட்பட பல நடிகர்கள் தங்களது திரைப்படம் வெளியாகும் போது திருப்பதி  உள்ளிட்ட கோவில்களுக்கு செல்லும் நிலையில் விஜய் சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran