ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (09:58 IST)

நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய ரூ. 200 வசூலிப்பதாக நகர காவல் நிலையத்தில் பெண் புகார்..

சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் இரவு சிதம்பரம் பழைய புவனகிரி ரோட்டை சேர்ந்த ஜெயபால் மகள் ஜெயசீலா (39), புகார் மனு கொடுத்தார். 
 
அந்த மனுவில் நேற்று மாலை  சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளதாகவும். அப்போது அங்கு இருந்த சில பக்தர்களிடம் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய ரூ.200 அங்கிருந்து தீட்சிதர்கள்  சிலர் பக்தர்களிடம் வசூலித்ததாக  கூறப்படுகிறது.
 
இதை தீட்சிதர்களிடம் ஜெயசீலா ஏன் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதற்கு ரூபாய் 200 வசூல் செய்கிறீர்கள் என்று கேட்டபோது, ஜெயசீலாவை அங்கிருந்த தீட்சிதர்கள் சிலர் உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
இதனால் அங்கு ஜெயசீலாவிற்கும் கோவில் தீட்சர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது மனுவை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.