வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (08:59 IST)

‘3 மணிநேரமா என நாங்களும் பயந்தோம்’… GOAT படத்தின் ரன்னிங் டைம் பற்றி பேசிய வெங்கட் பிரபு!

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் GOAT திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் தற்போது விறுவிறுப்பாக பரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. சமீபத்தில் படம் சென்சார் செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் பெற்றது. படத்தின் ஓடும் நேரம் 3 மணிநேரம் 3 நிமிடம் என தெரியவந்துள்ளது. சமீபகாலமாக அதிக நேரம் ஓடும் படங்கள் ரசிகர்களை கட்டிப்போடுவதில்லை. இந்த நெகட்டிவ் விமர்சனங்களுக்கு சமீபத்தில் ரிலீஸான இந்தியன் 2 படமே உதாரணம்.

இதுபற்றி பேசியுள்ள இயக்குனர் வெங்கட் பிரபு “முதலில் நாங்களும் 3 மணிநேரமா என பயந்தோம். ஆனால் அந்த கதைக்கு அந்த நேரம் தேவைப்படுகிறது.  படம் உங்களைக் கண்டிப்பாக கட்டிப்போடும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். படம் பரபரப்பாக செல்லும் ஆக்‌ஷன் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் சிவாஜி போல அனைத்து விதமான ரசிகர்களையும் கவரும் படமாக இருக்கும். கண்டிப்பாக உங்களால் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைக் கணிக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.