வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (09:44 IST)

’கோட்’ படத்தின் டிக்கெட் ரூ.390.. ஸ்நாக்ஸ் கட்டாயம்.. நெட்டிசன்கள் புலம்பல்..!

சென்னையில் உள்ள திரையரங்கில் கோட் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் நிலையில் டிக்கெட்டின் விலை 390 என்றும் டிக்கெட் உடன் ஸ்நாக்ஸ் கட்டாயம் என்றும் கூறப்பட்டிருப்பதை அடுத்து விஜய் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

விஜய் நடித்த கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் சென்னை கோயம்பேடு அருகே உள்ள ஒரு தியேட்டரில் இன்று முன்பதிவு தொடங்கியுள்ளது.

இந்த முன்பதிவில் டிக்கெட் கட்டணம் மட்டுமின்றி ஸ்நாக்ஸ் கட்டணம் இணைக்கப்பட்டுள்ளதாகவும் டிக்கெட் மற்றும் ஸ்நாக்ஸ் ஆகிய இரண்டும் சேர்ந்து 390 ரூபாய் கட்டணம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்நாக்ஸ் இல்லாமல் வெறும் டிக்கெட் மட்டும் வாங்கும் வசதி இல்லை என்றும் அதேபோல் வாங்கிய டிக்கெட்டுகளை கேன்சல் செய்யும் வசதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்கனின் இந்த அறிவிப்பு காரணமாக விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் கட்டாயமாக ஸ்நாக்ஸ் வாங்க வேண்டும் என்று கூறுவது சட்டவிரோதம் என்றும் தமிழக அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Edited by Siva