கொரோனா குமார்: விஜய்சேதுபதி பட இயக்குனரின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

விஜய்சேதுபதி பட இயக்குனரின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு
Last Modified வியாழன், 18 ஜூன் 2020 (07:05 IST)
விஜய்சேதுபதி பட இயக்குனரின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ஜூங்கா ஆகிய படங்களையும் கார்த்தி நடித்த ’காஷ்மோரா’ படத்தையும் இயக்கியவர் இயக்குனர் கோகுல். இவர் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது
இந்நிலையில் இயக்குனர் கோகுல் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் கோகுல் இயக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில் ’கொரோனா குமார்’. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை என்றாலும் இந்த படத்தில் குறைந்தபட்சம் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

கே.சதீஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசை அமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க விருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இந்த படம் குறித்த ஒரு நகைச்சுவையான வீடியோவும் தற்போது வெளிவந்து இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இயக்குனர் கோகுல் ஏற்கனவே ஹெலன் என்ற மலையால படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கி வருவதாக செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :