புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 17 ஜூன் 2019 (16:42 IST)

அந்த அழகிய நடிகைக்கு அப்பாவாகும் விஜய் சேதுபதி - அதிர்ச்சியில் கோலிவுட்!

எந்த வித சினிமா பின்பலமுமின்றி தன் கடின உழைப்பால் சினிமாவுக்கு வந்து உச்ச நடிகர்களுக்கு டஃ ப் கொடுத்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. 
குறுகிய காலத்தில் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை தக்கவைத்து கொண்டதோடு தமிழ் , தெலுங்கு மலையாளம் , கன்னடா என அணைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்திய நடிகர் விஜய் தற்போது, சிரஞ்சீவியின் ’சயீரா நரசிம்ம ரெட்டி’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்து முடித்திருப்பவர், அடுத்து ‘உப்பேனா’ என்ற தெலுங்குப் படத்தில் நடிக்கிறார்.
 
கடற்கரை பகுதி மைய கருவாக கொண்டு உருவாகும் இப்படத்தில் இளம் ஹீரோயின் கிரித்தி ஷெட்டிக்கு அப்பாவாக விஜய் சேதுபதி நடிக்கிறார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்துகொண்டிருக்கும் சமயத்தில் விஜய் சேதுபதி ஹீரோயின் ஒருவருக்கு அப்பாவாக நடிப்பது கோலிவுட் திரையுலகினரையே  அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 
நடிகை கிரித்தி ஷெட்டி , அழகர் சாமியின் குதிரை, பாண்டிய நாடு என சினேகாவின் காதலர்கள் என சில தமிழ் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.