திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 14 ஜூன் 2019 (08:14 IST)

ஜி.வி.பிரகாஷின் தங்கை ஒரு நடிகையாக வெல்வாரா??

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் திரைப்படத்தில் நடிகர் மற்றும் இசைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடிக்கவுள்ளார்.

விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் க/பெ/ரணசிங்கம் என்ற திரைப்படத்தில்,ஜி.வி.பிரகாஷின் தங்கை நடிக்கவுள்ளார் என்ற செய்தி ரசிகர்களுக்கு பெரும் எதிபார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் விஜய் சேதுபதியின் நடிப்புக்கு பவானி ஸ்ரீயால் ஈடுகொடுக்கமுடியுமா என்று ரசிகர்களிடம் ஒரு பேச்சு எடுபடுகிறது.

பவானி ஸ்ரீ, இதற்கு முன் ”High Priestess” என்ற வெப் சீரீஸில் நடித்திருந்தாலும், தற்போது கோலிவுட்டில் ஒரு நடிகையாக மக்கள் மனதில் இடம்பிடிப்பாரா என்று பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

மேலும் க/பெ ரணசிங்கம் திரைப்படத்தில் பவானி ஸ்ரீ, முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என அப்படக்குழுவினர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.