1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 14 ஜூன் 2019 (13:13 IST)

"நான் தோல்வி படங்கள் கொடுத்ததில்லை" - விஜய் சேதுபதி தடாலடி!

விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய அருண்குமார், மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியை வைத்து சிந்துபாத் படத்தை இயக்கியிருக்கிறார். 
 

 
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன்  சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ராஜராஜன் மற்றும் வன்சன் மூவிஸ் சார்பில் ஷான் சுதர்சன் இணைந்து தயாரித்துள்ளனர்.
 
விறுவிறுப்பாக நடைபெறு வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து தற்போது  புரமோஷன் பணிகள் தீவிரமாக நடை
பெற்றுவருகிறது. அதற்காக படத்தின் நாயகன் விஜய் சேதுபதி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பேசும்போது, படங்களின் வெற்றி தோல்வி உங்களை பாதிக்குமா என கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த விஜய்சேதுபதி, 
 
"நான் இதுவரை பெரிய தோல்வியை கொடுத்தது இல்லை. என்னுடைய சில படங்கள் சுமாராக போய் இருக்கலாம். ஆனால் பெரிய அளவில் தோல்வி அடைந்தது இல்லை. எனக்கு வெற்றி, தோல்வி இரண்டுமே ஒன்றுதான். இரண்டையுமே பெரிதாக நினைப்பதோ இதயத்துக்கு எடுத்து செல்வதோ இல்லை என கூறினார்.