1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 9 டிசம்பர் 2021 (19:15 IST)

’காத்துவாக்குல ரெண்டு காதல்’ அப்டேட் தந்த விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. 
 
இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அப்டேட் ஒன்றை விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் 
 
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் தனது பகுதிக்கான டப்பிங் பணியை தொடங்கி உள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த டப்பிங் பணியை முடித்து விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே நயன்தாரா மற்றும் பிரபு உள்பட ஒருசில தங்களது பகுதியின் டப்பிங் பணியை முடித்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படம் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்