Whats App-ல் ஒரு புதிய அப்டேட்
வாட்ஸப் ஒரு புதிய அப்டேட் வெளியிட்டுள்ளது.இது பயனர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் இயந்திரம் போல் வேகமாக சென்று கொண்டுள்ளது. மனிதர்களும் உலகில் போக்கிற்கு ஏற்ப தங்கள் பொழுதுபோக்குகளை அர்த்தப்படுத்த சில சமூக வலைத்தளங்கள் உதவுகிறது.
அந்த வகையில் வாட்ஸப் இன்று உலகளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வாட்ஸப் ஒரு புதிய அப்டேட் வெளியிட்டுள்ளது. அதில், நாம் ஒருவருடன் பேசுவது, தானாகவே அழியும் வகையில் புதிய அம்சத்தை வாட்ஸப் அறிமுகம் செய்துள்ளது. இது, ஒரு நாளைக்கு ஒருமுறையோ, ஓர்வாரத்திற்கு ஒருமுறையோ, ௯௦நாட்களுக்கு ஒருமுறையோ தானாகவே டெலிட் ஆகிவிடும் இதில் எது வேண்டுமோ அதை நம் தேர்வு செய்யலாம் எனது தெரிவித்துள்ளது.
மேலும், இந்த அம்சம் தேவையில்லை என்றால் இதை ஆப் செய்துவிடலாம் என தெரிவித்துள்ளது.