1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 டிசம்பர் 2021 (13:53 IST)

’மஞ்சப்பை’ இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபுதேவா: விஜய்சேதுபதி உதவி!

மஞ்சப்பை உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராகவன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபுதேவா நடிக்க உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் இந்த படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
மஞ்சப்பை ராகவன் இயக்கும் அடுத்த படத்தில் பிரபுதேவா ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் பிக்பாஸ் மூலம் பிரபலமான சம்யுக்தா கான் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த படத்திற்கு இமான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது