ஸ்கிவிட் கேம்ஸ் தமிழ் டப்பிங்கில் நாசர்!
ஸ்கிவிட் கேம்ஸ் தமிழ் டப்பிங்கில் நாசர் பின்னணிக் குரல் கலைஞராக பணியாற்றியுள்ளார்.
கொரியன் சினிமா மற்றும் சீரிஸ்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் உண்டு. ஹாலிவுட் சினிமாக்களுக்கு பின்னர் அதிக ரசிகர்களைக் கொண்ட சினிமா உலகமாக கொரியன் சினிமா உள்ளது. இந்நிலையில் நெட்பிளிக்ஸில் ஒரு மாதத்துக்கு முன்னர் வெளியான ஸ்கிவிட் கேம்ஸ் என்ற சீரிஸ் உலகளவில் கவனத்தைப் பெற்று பார்க்கப்பட்டு வருகிறது. இந்த தொடர் குறித்து பேசியுள்ள நெட்பிளிக்ஸின் தலைமை செயல் அதிகாரி இந்த தொடர் உலக அளவில் பிரம்மாண்டமாக ரசிகர்களை சென்று சேரும். ஆங்கிலமல்லாத தொடர்களில் நம்பர் ஒன் சீரிஸாக மாறும் எனக் கூறியுள்ளார். இந்நிலையில் வெளியானதில் இருந்து இப்போது வரை 11 கோடி பேரால் நெட்பிளிக்ஸ் தளத்திலேயே பார்க்கப்பட்டுள்ளதாம். ஆங்கில சீரிஸ்களுக்கு இணையாக இதன் பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இந்த சீரிஸ்க்கு கிடைத்துவரும் வரவேற்பை அடுத்து தமிழ் டப்பிங் வடிவம் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. இந்நிலையில் தொடரின் மையக் கதாபாத்திரங்களில் ஒன்றான யாங் ஊ கதாபாத்திரத்துக்கு தமிழ் நடிகர் நாசர் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை இணையத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.