வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 5 டிசம்பர் 2022 (15:47 IST)

விஜய் சேதுபதியின் கேரியரில் படுதோல்வி படமாக அமைந்த DSP!

விஜய் சேதுபதி நடித்துள்ள DSP என்ற படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சேதுபதி மற்றும் செக்க சிவந்த வானம் ஆகிய திரைப்படங்களுக்குப் பின்னர் விஜய் சேதுபதி மீண்டும் காவல்துறை அதிகாரியாக இந்த படத்தில் நடித்து இருந்தார்.

அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் அனு கீர்த்திவாஸ் நடித்திருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய ஸ்டோன்பென்ச் நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இந்த படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்நிலையில் கடந்தவாரம் வெளியான முதல்நாளில் இருந்து இந்த படம் படுமோசமான வசூலைப் பெற்று வருகிறது. தொடர்ந்து வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்ததால் தான் விஜய் சேதுபதிக்கு இந்த நிலைமை என்று சொல்லப்படுகிறது. முன்னதாக விஜய் சேதுபதி நடித்த மாமன்னன் திரைப்படமும் திரையரங்கில் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் கேரியரிலேயே மிக மோசமான வசூலைப் பெற்ற படம் என்ற மோசமான சாதனையை DSP படம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் இந்த படத்துக்கு சுத்தமாக ரசிகர்கள் ஆதரவு இல்லை என்று சொல்லப்படுகிறது.