1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified திங்கள், 5 டிசம்பர் 2022 (12:57 IST)

இன்று முதல் மீண்டும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு.. கமல் கலந்து கொண்டதாக தகவல்!

indian
இன்று முதல் மீண்டும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு.. கமல் கலந்து கொண்டதாக தகவல்!
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும்  ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இன்று முதல் மீண்டும்  ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் சென்னை விமான நிலையத்தில் படப்பிடிப்பு தற்போது நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
மேலும் இந்த படப்பிடிப்பில் கமலஹாசன் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் இன்று முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை படப்பிடிப்பு நடைபெறும் என்றும் விமான நிலையத்தில் பல முக்கிய காட்சிகளை படமாக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் முடிந்துவிடும் என்றும் அதன் பிறகு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்கி ஏப்ரல் அல்லது மே மாதம் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran