'பிகில்' பர்ஸ்ட்லுக்கில் உள்ள சிறப்பு அம்சங்கள்

Last Modified வெள்ளி, 21 ஜூன் 2019 (19:04 IST)
விஜய் நடித்து வரும் 63வது திரைப்படத்தின் டைட்டில் 'பிகில்' என்பதை சற்றுமுன் பார்த்தோம். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியான சில நிமிடங்களில் உலக அளவில் டிரண்டுக்கு வந்துவிட்டதே இந்த படத்தின் எதிர்ப்பார்ப்பின் உச்சம் தெரிய வருகிறது
இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் இருந்து சில விஷயங்கள் படம் குறித்தும் தெரிய வந்துள்ளது. முதலாவதாக இந்த படத்தில் விஜய், அப்பா-மகன் என இரண்டு கேரக்டர்களில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்பா விஜய் நெற்றியில் குங்குமம், விபூதியுடன் கையில் அரிவாளுடன் கூடிய ஒரு தாதா என்றும் கருதப்படுகிறது. அதேபோல் வடசென்னை பின்னணி, மீன்சந்தை ஆகியவை விஜய் ஒரு மீனவக்குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வருகிறது. இவருடைய கேரக்டரின் பெயர் தான் 'பிகில்' என கருதப்படுகிறது
அதேபோல் ஏற்கனவே வெளிவந்த செய்தியின்படி மகன் விஜய், ஒரு கால்பந்தாட்ட பயிற்சியாளர் என்பதும் அவரது கண்களில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற வெறி இருப்பதும் தெரிய வருகிறது. மேலும் இந்த படம் தீபாவளி வெளியீடு என்ற வாசகமும் இருப்பதால் விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தும் உறுதியாகியுள்ளது. ஆக மொத்தம் தெறி, மெர்சலை அடுத்து ஒரு ஹாட்ரிக் மசாலா கலந்த கமர்ஷியல் படத்தை அட்லி இயக்கியுள்ளார் என்பது இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் இருந்து தெரிய வருகிறது


இதில் மேலும் படிக்கவும் :