திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 21 ஜூன் 2019 (12:02 IST)

இணையத்தில் வெளியானது தளபதி 63 பர்ஸ்ட் லுக்! படக்குழுவினர் அதிர்ச்சி!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் அட்லி கூட்டணியில்  தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளனர்.
 

 
விஜய்க்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கும்  இப்படத்தில்  கதிர், யோகிபாபு உள்ளிட்டோர்  நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார். அதுமட்டுமின்றி படத்திற்கு கொடுத்தால் மாஸ் தரும் வகையில் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். 
 
பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். மேலும் அவர், தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாகவும், அதில் மகன் கேரக்டரின் பெயர் பிகில் என்றும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. 
 
அவ்வப்போது படத்தைப் பற்றிய தகவல்கள் கிடைத்தாலும் படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில்  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 21-ம் தேதி(இன்று) மாலை 6 மணிக்கும், இரண்டாவது லுக் 22-ம் தேதி நள்ளிரவிலும் வெளியாகும் என்று படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். 
 
இந்த படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும், விஜய்யின் கதாபாத்திரம் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கும் என்றும், என்ன தலைப்பு இருக்கும் என்றும் விஜய் ரசிகர்கள் மரண வெய்ட்டிங்கில் காத்திருக்கும் வேளையில்  இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 
 
அந்த போஸ்டரில் ‘அசால்ட்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மையான பர்ஸ்ட் லுக் போஸ்டரா இல்லை ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டரா என்று தெரியவில்லை. இருப்பினும் இந்த போஸ்டரை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிக அளவில் ஷேர் செய்து வைரலாக பகிர்ந்து வருகின்றனர். 


 
மேலும் ஆளாளுக்கு தங்களுக்கு தோன்றும் டைட்டில்களை வைத்து  வெறித்தனம், மைக்கல், கேப்டன் மைக்கல், Cm , அடாவடி, அதிரடி, அசால்ட் என்று தலைப்புகளில் போஸ்டர்களை கிரியேட் செய்து இதில் எதாவது ஒன்று தான் படத்தின் தலைப்பாக இருக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.