செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 20 ஜூன் 2019 (17:21 IST)

ஷிகார் தவானுக்கு ஆறுதல்… ரிஷப் பண்ட்டுக்கு வாழ்த்து – சச்சின் டிவிட் !

உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியுள்ள ஷிகார் தவானுக்கு ஆறுதலும் அவருக்குப் பதில் சேர்க்கப்பட்ட ரிஷப் பண்ட்டுக்கு வாழ்த்துகளையும் கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடியபோது அருமையாக விளையாடிய தவான், அந்த போட்டியின் இடையே காயம் அடைந்தார். இருப்பினும் அவர் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் மட்டும் ஆடமாட்டார் என்றும், அதன்பின் அணியில் மீண்டும் இணைந்து கொள்வார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தவானுக்கு ஏற்பட்ட காயம் இன்னும் குணமடைய நாட்களாகும்  என்பதால் அவர் உலகக்கோப்பையில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவானின் விலகலால் அணிக்கு பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு மாற்று வீரராக பிசிசிஐ சார்பில் ரிஷப் பண்ட் லண்டனுக்கு அழைக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட்டை மாற்று வீரராக இணைத்துக்கொள்ள ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து சச்சின் தனது டிவிட்டரில் ‘தவான் உங்களுக்காக வருந்துகிறேன். நீங்கள் சிறப்பாக விளையாடினீர்கள். உலகக்கோப்பைப் போன்ற தொடரில் இருந்து விலகுவது எவ்வளவு வேதனை எனத் தெரியும். நீங்கள் இன்னும் வலுவாக இந்திய அணிக்கு திரும்புவீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.’ எனவும் ரிஷப் பண்ட்டுக்கு ‘ரிஷப் நீங்கள் சிறப்பாக விளையாடிக் கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் திறமையை வெளிக்காட்ட இதைவிட சிறப்பான தளம் கிடைக்காது. வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.