"திருவள்ளுவர் எழுத்தாளர் அவ்ளோவ் தான், ஆனால் தளபதி ஆல் ன் ஆல்" ரசிகர்களின் அலப்பறை!

Last Updated: வெள்ளி, 21 ஜூன் 2019 (12:43 IST)
தமிழ் சினிமா நடிகர்களில் அதிக ரசிகர்களுக்கு சொந்தக்காரர் நடிகர் விஜய். சினிமாவையும் தாண்டி தன் சொந்த அண்ணனாக கருதும் அளவிற்கு ரசிகர்கள் அவர் மீது பாசமும், மரியாதையும் வைத்துள்ளனர்.    விஜய் நடிப்பில் ஒரு படம் வெளிவருகிறது என்றாலே அதை திருவிழா போல கொண்டாடுவார்கள். அந்த அளவிற்கு தமிழ் சினிமா மட்டுமின்றி வேற்று மாநில ரசிகர்களும் விஜய்க்கு அதிகம். 


 
நடிகர் விஜய் தற்போது அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளார்.  விஜய்க்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கும்  இப்படத்தில்  கதிர், யோகிபாபு உள்ளிட்டோர்  நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார். அதுமட்டுமின்றி படத்திற்கு  மாஸ் தரும் வகையில் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். 
 
பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து கோச்சராக நடிக்கிறார். மேலும் அவர், தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாகவும், அதில் மகன் கேரக்டரின் பெயர் பிகில் என்றும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகவுள்ளது. 
 
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ட்விட்டரில் விஜய் ரசிகர் செம்ம ஆக்ட்டீவாக இருந்து மக்களின் கவனத்தை தளபதி 63 படத்திற்காக திசை திருப்பி வருகின்றனர். அந்தவகையில் விஜய் ரசிகர்கள் ஒரு ட்விட்டரில், "திருவள்ளுவர் ஒரு எழுத்தாளர் அவ்ளோவ் தான், ஆனால் என் தளபதி பாடகர் , நடிகர் அதையும் தாண்டி சிறந்த மனிதர் புரியுதா? " என்று கூறி கெமெண்ட்ஸ் செய்துள்ளார். 


 
இந்த கெமெண்ட்ஸை படித்தவுடன் சிறப்பு வரும் அளவிற்கு, என்ன தான் இருந்தாலும் திருவள்ளுவருடன் இப்படியா கம்பேர் பண்ணுவது... உங்க அலப்பறை தாங்கமுடியல என்றெல்லாம் நெட்டிசன்ஸ் புலம்பி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :