சனி, 28 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 3 நவம்பர் 2023 (13:52 IST)

தளபதி 68 பட ஷூட்டிங்குக்காக தாய்லாந்துக்கு பறந்த விஜய்!

கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆன லியோ திரைப்படம் இதுவரை 541 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று முன் தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய பல நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்று பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் பேச்சு, அவர் சொன்ன குட்டிக்கதை மற்றும் படத்தின் இணை இயக்குனர் ரத்னகுமார் ஆகியோரின் பேச்சு இணையத்தில் கவனத்தையும் சர்ச்சைகளையும் கிளப்பியது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு வரும் ஞாயிற்றுக் கிழமை சன் தொலைக்காட்சியில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் லியோ சக்ஸஸ் மீட் முடிந்த அடுத்த நாளே தன்னுடைய அடுத்த படத்துக்கான ஷூட்டிங்குக்காக விஜய் தாய்லாந்து சென்றுள்ளார். தளபதி 68 படக்குழு சில நாட்களுக்கு முன்பாகவே தாய்லாந்து சென்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.