வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 நவம்பர் 2023 (13:21 IST)

விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்றால் இந்த இரண்டை செய்ய வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

2026 ஆம் ஆண்டு புதிய அரசியல் கட்சி தொடங்கி நடிகர் விஜய் களத்தில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரது வருகையை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் 
 
எம்ஜிஆரை தவிர வேறு எந்த அரசியல் கட்சி தலைவரும் கட்சி ஆரம்பித்து முதல்வரானதில்லை. அந்த வகையில் விஜய், கட்சி ஆரம்பித்து வெற்றி பெறுவாரா அல்லது பத்தோடு பதினொன்றாக மாறிவிடுவாரா என்பதை பார்க்க அனைவரும் ஆவலுடன் உள்ளனர்
 
இந்த நிலையில் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்றால் முதலில் மது ஒழிப்பிற்கு குரல் கொடுக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 
அதுமட்டுமின்றி சினிமாவை விட்டுவிட்டு பத்து வருடங்கள் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அதன் பிறகு அவர் தாராளமாக அரசியலுக்கு வரலாம் என்றும் கூறியுள்ளார்.3
 
Edited by Mahendran