சனி, 28 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 3 நவம்பர் 2023 (08:06 IST)

சன் டிவியில் லியோ சக்ஸ்ஸ் மீட் ஒளிபரப்பு… எப்போது தெரியுமா?

கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆன லியோ திரைப்படம் இதுவரை 541 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று முன் தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய பல நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்று பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் பேச்சு, அவர் சொன்ன குட்டிக்கதை மற்றும் படத்தின் இணை இயக்குனர் ரத்னகுமார் ஆகியோரின் பேச்சு இணையத்தில் கவனத்தையும் சர்ச்சைகளையும் கிளப்பியது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு வரும் ஞாயிற்றுக் கிழமை சன் தொலைக்காட்சியில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நிகழ்ச்சியில் நடந்த சர்ச்சை பேச்சுகள் கட் செய்யப்பட்டு ஒளிபரப்பப் படுமா அல்லது அப்படியே ஒளிபரப்பப்படுமா என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.