வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 2 நவம்பர் 2023 (12:47 IST)

விஜய்யின் பேச்சினை ரசிக்க முடியவில்லை- ராஜேஷ்வரி பிரியா

leo vijay
லியோ பட வெற்றி விழாவில் விஜய்யின் பேச்சு ரசிக்கும்படியாக இல்லை அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர்  நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் லியோ. இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று, ரூ.500 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது.

இப்படத்தின் வெற்றி விழா  நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், விவிஐபிக்கள் மற்றறும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த   விழாவில் நடிகர் விஜய் பேசியது எல்லோரது கவனத்தைப் பெற்றது. விஜய்யின் பேச்சை ரசிகர்கள் வைரலாக்கினர்.

இந்த நிலையில், விஜய்யின் பேச்சு ரசிக்கும்படியாக இல்லை அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

‘’சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் என்று பதில் கூறி இருக்கும் நடிகர் விஜய் அவர்கள் தன்னை ஒரு சினிமா நடிகனாக மட்டும் பாருங்கள் என்று கூறாமல் தளபதியாக பார்க்க சொல்கிறார்.

தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் இருப்பதாகவும் மாணவர்கள் குடிப்பதில்லை என்றும் பேசுவது மிகவும் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.

நெகட்டிவ் கேரக்டரில் மட்டும் நீங்கள் புகை மதுவை பயன்படுத்தவில்லை.லியோ திரைபடத்தில் பள்ளிக்கு செல்லும் தன் பிள்ளை சிகரெட் குடிப்பதை நேரடியாக அப்பாவிடம் சொல்லும்போது கூட சிகரெட்டின் கெடுதல் பற்றி பேசாத நெகட்டிவ் அப்பாவாகவும் நடித்துவிட்டு காரணம் சொல்லி மழுப்பி பேசாதீர்கள்.

மக்களை ஆணையிட சொன்னீர்கள் .நானும் மக்களில் ஒருவர்தான் இனி மது,புகை காட்சிகளில் நடிக்கமாட்டேன் என நீங்கள் அறிக்கை கொடுங்கள்.

நல்ல சமூகத்தை உருவாக்க வேண்டிய இடத்தில் இருக்கும் எங்களை போன்றோரால் உங்களது 2 ரவுண்டு பேச்சினை ரசிக்க முடியவில்லை.

மாணவர்கள் மத்தியில் மது,கஞ்சா,புகை மற்றும் பல போதை பொருள்கள் புழக்கத்தினை கண்ணெதிரே காண்பிக்கத் தயாராக உள்ளேன்’’என்று தெரிவித்துள்ளார்.