புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 2 பிப்ரவரி 2019 (16:58 IST)

எமனாலும், எவனாலும் அழிக்க முடியாத சக்தி: வைரலாகும் விஜய்யின் போஸ்டர்

அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் நடிகர் விஜய். இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க, விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். 
 
நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபு, விவேக் ஆகியோரும், வில்லன் கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி ஆகியோரும் நடிக்கின்றனர். கால்பந்தாட்டத்தின் கோச்சாக விஜய் நடிக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
விஜய்க்கு பல ரசிகர்கள் உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது வியக்க வைக்கும் வகையில் விஜய்யின் போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆம், ஜூன் மாத இறுதியில் வர உள்ள விஜய்யின் பிறந்த நாளுக்கான கொண்டாட்டத்தை அவரது ரசிகர்கள் இப்போதே துவங்கியுள்ளனர்.
 
மதுரையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் தமிழகத்தில் எவனாலும் எமனாலும் அழிக்க முடியாத சக்தியே என போஸ்டர் அடித்துள்ளனர். எப்பா.. அதுக்குள்ள இப்படியா? என கேட்க தோன்றுகிறது.  ஆனால், இது இப்போது வெளியான புகைப்படமா அல்லது முன்னர் வெளியானது இப்போது வைரலாகிறதா என தெரியவில்லை...