திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (07:57 IST)

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் விஸ்வாசம் நடிகை!

கடந்த பொங்கல் அன்று ரிலீஸ் ஆன விஸ்வாசம் படம் ரசிகர்கள் மற்றும் பேமிலி ஆடியன்ஸ்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு தொடர்ந்து பல சாதனைகளையும் செய்து வருகிறது . இந்த படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்து அனைத்து தரப்பினர்களுக்கும் நல்ல லாபத்தை கொடுத்துள்ளளது. இந்த நிலையில் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த அங்கிதா தற்போது மற்றொரு படத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகின்ற ' மாமனிதன் ' என்னும் திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் அங்கிதா நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவர் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும், விஜய்சேதுபதியுடன் நடித்தாலும் அங்கிதா அவருடைய மகளாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக காயத்திரி நடித்து வருகிறார். மேலும் குருசோமசுந்தரம் , ஷாஜி ஷேன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் . இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து வருகிறார். ஒரே குடும்பத்தை சேர்ந்த இளையராஜா , கார்த்திக் ராஜா , யுவன் ஷங்கர் ராஜா ஆகிய மூவரும் சேர்ந்து இசையமைக்கின்ற முதல் படமாக  ' மாமனிதன் '  உள்ளது. இந்த படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.