1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: வியாழன், 31 ஜனவரி 2019 (14:49 IST)

மாமனிதனை தொடர்ந்து விஜய்சேதுபதியின் அடுத்த படம் குறித்த அப்டேட்ஸ் இதோ..!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி சீனு ராமசாமியின் இயக்கத்தில் மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை தொடந்து அடுத்ததாக விஜய் சந்தர் இயக்கத்தில் புது படம் ஒன்றில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 


 
இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நடிகை ராஷி கண்ணா நடிக்கவிருப்பதாகவும்,  காமெடி நடிகர் சூரி விஜய்சேதுபதியுடன் சேர்த்து கலக்கபோகிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்தி வெளிவந்துள்ளது. 
 
பழமையான பரம்பரியதுடன் பல வெற்றிப்படங்களை கொடுத்த விஜயா புரொடக்க்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும்  இப்படத்திற்கு  ஓரசாத புகழ் விவேக் -மெர்வின் இசையமைக்க உள்ளனர். 
 
விவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன் ஆகியோர் வடகறி படத்தில் அறிமுகமாகி பின்னர்  புகழ், டோரா , குலேபகாவலி ஆகிய படங்களில் பல வெற்றி பாடல்களை கொடுத்துவந்தனர். பிறகு இவர்கள் இருவரின் காம்போவில் உருவான " ஒரசாத பாடல்" இளைஞர்களிடையே வேற லெவல் பாராட்டுக்களை பெற்றதோடு 57 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்றுள்ளது.  
 
இதனை தொடர்ந்து, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் 2 படங்களில் விவேக்-மெர்வின் இசையமைக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 
விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது என மெர்வின் சாலமோன் தெரிவித்துள்ளனர் .