வியாழன், 11 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 19 மே 2019 (10:09 IST)

விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்! எப்போது தெரியுமா ?

விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்! எப்போது தெரியுமா ?
தமிழ் சினிமாவில் இரு பெரும் நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் நடிகர் அஜித் - விஜய். இருவருக்கும் தமிழகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர். இருவரின் படங்கள் ரிலீஸ் என்றாலே அன்று அவர்களது ரசிகர்களுக்கு ஒரே திருவிழா கொண்டாட்டம் தான்.
 
இவர்கள் இருவருடைய ரசிகர்களுக்கும்  மகிழ்ச்சிகரமான செய்து என்னவென்றால்...அடுத்த ஆண்டு 2020 ல் அஜித், விஜய் நடித்த படங்கள் ஒரே நாளில் திரைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்! எப்போது தெரியுமா ?
தற்போது விஜய்யின் 63 படத்தின் வேலைகள் நடைபெற்றுவருகின்றன...அதேபோல் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
 
இந்நிலையில் நடிகர் விஜய்யின் 64 படமும், அஜித்தின் - 60 படமும் வரும் 2020 ஆம் ஆண்டின் கோடை விடுமுறைக்கு வெளிவரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
 
மேலும் விஜய்யின் 64 வது  படத்தை மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அடுத்து அஜித் நடிக்கும், 60 வது படத்தை எச். வினோத் இயக்கவுள்ளார். 
விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்! எப்போது தெரியுமா ?
ஏற்கனவே நடிகர் அஜித்தின் வீரம் , விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் கடந்த 2014 ஆம் ஆண்டில் பொங்கள் என்று ரிலீசானது குறிப்பிடத்தக்கது.