புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 17 மே 2019 (19:00 IST)

உலகக்கோப்பையில் கங்குலி – ஐசிசி அறிவிப்பு !

உலகக்கோப்பை தொடரில் கங்குலி இந்தியாவில் இருந்து வர்ணனையாளராக செல்ல இருக்கிறார்.

பிரிட்டனில் வரும் மே 30 முதல் ஜுலை 14 வரை நடைபெறவுள்ள 12 வது (ஒருநாள் கிரிக்கெட்) உலகக் கோப்பையில் விளையாட விராட் கோலி, ரோகித் சர்மா, தவான், தோனி, ஷமி, புவனேஸ்வர் குமார், பும்ரா, கேதர் ஜாதவ், குல்தீப் யாதவ், கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ஹர்திக் பாண்ட்யா, சாஹல், ஜடேஜா ஆகியோர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அனைத்து அணிகளும் உலகக்கோப்பைப் போட்டிக்காக தயார் ஆகி வருகின்றன. இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் தொடர் முடிந்து ஓய்வில் இருக்கின்றனர். இன்னும் ஒரு வாரத்தில் இந்திய அணி இங்கிலாந்து செல்ல இருக்கிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலியும் உலகக்கோப்பைக்காக இங்கிலாந்து செல்ல இருக்கிறார். இம்முறை இங்கிலாந்தில் நடக்கும் போட்டிகளுக்கு வர்ணனையாளராக செல்ல இருக்கிறார். அவரோடு சேர்ந்து இன்னும் மூன்று இந்தியர்களும் வர்ணனையாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சவ்ரவ் கங்குலி, சஞ்சய் மஞ்சரேக்கர் ,ஹர்ஷா போக்லே  ஆகிய மூன்று பேரும் இந்தியா சார்பில் செல்ல இருக்கின்றனர்