திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 16 மே 2019 (21:52 IST)

விஜய்யின் அடுத்த படத்தை தயாரித்து இயக்குவது ஒரு பெண் இயக்குனரா? புதிய தகவல்

கடந்த இரண்டு நாட்களாக விஜய்யுடன் ஒரு பெண் இயக்குனர் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் விஜய்யின் அடுத்த படத்தில் இந்த பெண் இயக்குனர் பணிபுரியவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அந்த பெண் இயக்குனர் சினேகா பிரிட்டோ என்பவர்தான். இவர் 'சட்டம் ஒரு இருட்டறை 2' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும் சினேகா பிரிட்டோ, விஜய்யின் நெருங்கிய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
விஜய் நடிக்கவுள்ள 64வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள நிலையில் இந்த படத்தை தயாரிப்பது சினேகா பிரிட்டோ என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி 'தளபதி 64' படத்தில் அவர் உதவி இயக்குனராக பணிபுரியவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
சினேகா பிரிட்டோவின் தந்தை பி.விமல் என்பவர் விஜய் ஆரம்பகாலத்தில் நடித்த 'ரசிகன், தேவா மற்றும் 'செந்தூரப்பாண்டி' போன்ற படங்களை தயாரித்தவர் என்பதும் இருப்பினும் அதே பேனரில் இந்த படத்தை தயாரிக்காமல் புதிய பட நிறுவனம் ஒன்றை தொடங்கி அந்த பட நிறுவனத்தின் மூலம் 'தளபதி 64' படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது