தொடர்புடைய செய்திகள்
- புஷ்பா 2 தயாரிப்பாளரைத் தொடர்ந்து இயக்குனர் வீட்டிலும் வருமான வரிசோதனை!
- புஷ்பா 2 ரிலோடட் வெர்ஷனைக் கொண்டாடும் ரசிகர்கள்… அப்போ 2000 கோடி கன்ஃபார்மா?
- மேலும் 20 நிமிடத்தைச் சேர்த்த புஷ்பா 2 படக்குழு…!
- ரசிகை பலியான வழக்கு: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த ஜாமீன்..!
- இன்னும் ஓயாத புஷ்பா 2 தாக்கம் … 24 நாட்களில் வசூல் செய்த தொகை!
புஷ்பா 2 ஓடிடி ரிலீஸ் எப்போது?.. நெட்பிளிக்ஸ் கொடுத்த அப்டேட்!
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த புஷ்பா 2 சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வசூலை வாரிக் குவித்தது. இப்போது வரை கணிசமான திரையரங்குகளில் இந்த படம் ஓடி வருகிறது. படம் இதுவரை 1900 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதன் மூலம் இந்திய சினிமாக்களில் அமீர்கானின் டங்கல் திரைப்படத்துக்குப் பிறகு அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை புஷ்பா 2 படைத்துள்ளது. இதையடுத்து இந்த படம் எப்போது ஓடிடியில் ரிலீஸாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.
இந்நிலையில் படத்தின் அனைத்து மொழி உரிமைகளைப் பெற்றுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம் புஷ்பா 2 விரைவில் ஓடிடியில் ரிலீஸாகும்” என அப்டேட் கொடுத்துள்ளது. ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் இந்த படம் ஓடிடியில் ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
