திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : புதன், 11 செப்டம்பர் 2019 (14:15 IST)

இலங்கையில் 'பிகில்' செய்த வரலாற்று சாதனை!

தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பிகில். இப்படத்தில், விஜய் அப்பா – மகன் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார். 


 
பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். உடன்  யோகி பாபு, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷரூப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா, தேவதர்ஷினி, ரெபா மோகா ஜான், வர்ஷா போலம்மா, ஐஎம் விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். 
 
வருகிற தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ள இப்படத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். விஜய் பெரிய நடிகர் என்பதால் நிச்சயம் இப்படத்திற்கு ரசிகர்களின் கூட்டம் முந்தியடித்து செல்லும் என்பதாலே பெரும்பாலும் பெண்கள் முதல் நாளன்று தியேட்டருக்கு செல்ல மாட்டார்கள். அதனை கருத்தில் கொண்டு தற்போது பெண்களுக்கென்றே இலங்கையில் பிரத்தேயகமான காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இது இலங்கை திரையுல வரலாற்றில்  முதன்முறையாக விஜய்யின் பிகில் படத்தின் மூலமாக அமல் படுத்தவுள்ளனர்.