’சங்கத்தமிழன்’ படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட்டை அறிவித்த சூரி!

Last Modified செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (21:43 IST)
விஜய் சேதுபதி நடித்த ’சங்கத்தமிழன்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் தீபாவளியன்று விஜய்யின் ’பிகில்’ திரைப்படம் வெளியாக இருப்பதால் இந்தப் படம் முன்கூட்டியே வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் ’சங்கத்தமிழன்’ திரைப்படம் தீபாவளிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே, அதாவது அக்டோபர் 4ஆம் தேதி ரிலீசாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த தகவலை நடிகர் சூரி தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். மேலும் ’சங்கத்தமிழன்’ திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதியுடனும் விஜய் சந்தருடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது என்றும் அவர் தெரிவித்துள்ளதோடு இந்த ட்விட்டை தனது மகள் டைப் செய்ததாகவும் அதற்காக தனது மகளுக்கு நன்றி தெரிவித்து கொள்வட்ராகவும் சூரி தெரிவித்துள்ளார்.

சூரியின் இந்த அறிவிப்பை அடுத்து விஜய் படத்துடன், விஜய்சேதுபதி
படம் வரும் தீபாவளி அன்று மோதவில்லை என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் கார்த்தியின் ’கைதி’ திரைப்படம் விஜய்யின் பிகில் திரைப்படத்துடன் தீபாவளி அன்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடித்துள்ளார். மற்றொரு நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள இந்த படத்தில் சூரி, நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். விஜயா புரடொக்சன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவும், ப்ரவீன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்


இதில் மேலும் படிக்கவும் :