வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 8 மார்ச் 2024 (23:33 IST)

சொத்துகளை வாங்கிக் குவித்துள்ள விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதி!

நயன்தாரா அவரது  காதலரான விக்னேஷ் சிவனை  கடந்த 2023 ஆம் ஆண்டு  ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். 
 
இந்த நிலையில்,  சமீபத்தில், நயன்தாராவின் பதிவுகளால் அவர் விக்னேஷ் சிவனைவிட்டு பிரிந்துபோய்விட்டதாக வதந்திகள் பரவியது.
 
இந்த வதந்திகளுக்கு அவர்கள் முற்றுப்புள்ளி வைத்தனர். இந்த நிலையில், இருவரும் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தில் 12 சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளதாக தகவல் வெளியாகிறது. இருவரும் சேர்த்து அந்த சொத்துகளை வாங்கியுள்ளதாகவும், அதனால் சமூக வலைதளங்கலில் பரவுகின்ற செய்திகளை போல வதந்திகளை போல இருவரும் பிரிய வாய்ப்பேயில்லை என்று தகவல் வெளியாகிறது.
 
ஆனால் மக்கள் இதுபோன்ற வதந்திகள் பரப்ப வேண்டும் என்பதற்காகவே  நயன்தாரா இதுபோன்ற பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்டார் என்ற தகவலும் கூறப்படுகிறது.
 
எது எப்படியோ நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பிரியவில்லை பிரியவும் வாய்ப்பில்லை என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், சமீபத்தில் எல்.ஐ.சி படத்திற்கு கிடைத்த சம்பளத்தில் இருந்து விக்னேஷ் சிவன், அவரது மனைவி  நயன்தாராவுக்கு மேபேக் என்ற பென்ஸ் சொகுசு காரை பரிசளித்ததாகவும் கூறப்படுகிறது.