1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 8 மார்ச் 2024 (15:50 IST)

92 வயதில் 5வது திருமணம் செய்யும் தொழிலதிபர்!

Rupert Murdoch
பிரபல தொழிலதிபர் ரூபர்ட் முர்டோக் தனது 92வயதில் 5வது திருமணம் செய்ய   உள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், பாக்ஸ் நியூஸ் உள்ளிட்ட அமெரிக்க செய்தி ஊடகங்களின் உரிமையாளராக இருந்தவர்  ரூபர்ட் முர்டோக். இவருக்கு வயது 92. இவர் தனது   ஊடக  நிறுவனங்களின் கட்டுப்பாட்டை  கடந்த  நவம்பரில் தன் மகன் லாச்லனிடம்  ஒப்படைத்தார்.
 
இந்த  நிலையில், ஏற்கனவே 5 திருமணங்கள் செய்திருந்த முர்டோ, தன் நீண்ட நாள் காதலியான எலெனா ஜுகோவாவை (67) திருமணம் செய்துகொள்வதாக சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
 
இருவருக்கும் இடையே 25 வயது வித்தியாசம் இருந்தபோதிலும், இருவரிடம் திருமணம் கலிபோர்னியாவில் உள்ள தனது பங்களாவில் நடக்க உள்ளதாக ரூபர்ட் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.