ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 8 மார்ச் 2024 (21:30 IST)

இந்தியன் -2: கமலுக்கு பிரமாண்ட பாடல்! ஷங்கர் முடிவு... இத்தனை கோடி செலவா?

Indian 2
ஷங்கர் இயக்கத்தில், கமல், சித்தார்த், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில், அனிருத் இசையில், லைகா -ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்து வரும் படம் இந்தியன் 2.

இப்படம் 3 பாகங்களாக வெளியாக உள்ள  நிலையில்,  இப்படத்திற்காக பிரமாண்டமான செலவில் ஒரு பாடலை அமைக்க  இயக்குநர் ஷங்கர் முடிவெடுத்துள்ளார் என  தெரிகிறது.
 
ஏற்கனவே ஷங்கர் ராம் சரணுடன் இணைந்து பணிபாற்றி வரும் கேம்சேஞ்சர் படத்தில் ஒரு பாடலுக்கு ரூ.30 கோடி செலவில் எடுக்கப்பட்ட நிலையில், இந்தியன் படத்தில் கமல் இடம்பெறும்  பாடலுக்காக பிரமாண்டமாக காட்சிகள் அமைக்க ஷங்கர் முடிவெடுத்துள்ளார்.
 
ஆனால், தற்போது வேட்டையன் படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விடாமுயற்சி பட ஷூட்டிங்கிற்கு செலவு என லைகா அடுத்தடுத்து கமிட்டாகியுள்ள படங்களுக்கு செலவு செய்ய உள்ளதால், இந்தியன் 2 படத்தில் ஒரு பாடலுக்கு ஒரு படத்திற்கான செலவு செய்ய ஒத்துழைக்குமா? என கேள்வி எழுந்துள்ளது.
 
ஆனால், லைகாவுடன் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இணைந்துள்ளதால்,  இந்தியன் 2 படத்தில் ரூ.30 செலவில் பிரமாண்ட பாடல் காட்சிகளுக்கு ஒப்புக்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.