வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 8 மார்ச் 2024 (08:32 IST)

எய்ட்ஸ் பாதித்த பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து வைத்த பெற்றோர்.. மணமகன் வீட்டார் போலீசில் புகார்..!

தன்னுடைய மகனுக்கு எய்ட்ஸ் பாதித்த பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக மணப்பெண்ணின் பெற்றோர் மீது மணமகனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடசென்னை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் ஒரு சில வாரங்களில் மணப்பெண் கர்ப்பமானார். இதனை அடுத்து அவர் மருத்துவ பரிசோதனை செய்ய சென்றபோது அவருக்கு எய்ட்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவருடைய பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அந்த பெண்ணுக்கு எய்ட்ஸ் இருந்ததாகவும் ஆனால் அதை மறைத்து தங்கள் மகனுக்கு திருமணம் செய்து விட்டார்கள் என்றும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்

ஆனால் மருத்துவ பரிசோதனையில் கணவருக்கு எய்ட்ஸ் இல்லை என்று கூறப்பட்டுள்ள நிலையில் இந்த புகார் குறித்த உண்மை தன்மையை ஆய்வு செய்ய வேண்டி இருக்கிறது என்றும் அந்த பெண்ணுக்கு எய்ட்ஸ் இருக்கிறதா என்பதை மீண்டும் பரிசோதனை செய்து உறுதி செய்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

Edited by Siva