வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 8 மார்ச் 2024 (09:33 IST)

"நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே " படம் எப்படி இருக்கு..?

பூர்வா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்,பிரதீப் குமார் தயாரிப்பில் அவரே இசையமைத்து,இயக்குனர் பிரசாத் ராமர் இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள படம்"நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே"
 
படத்தினை  உத்தரா புரொடக்சன் நிறுவனத்தின் மூலம் விநியோகம் செய்துள்ளனர். 
 
இத் திரைப்படத்தில் செந்தூர் பாண்டியன், ப்ரீத்தி கரண்,சுரேஷ் மதியழகன்,தமிழ் செல்வி உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்
 
படத்தின் நாயகன் செந்தூர் பாண்டியன் தனது நண்பர்களுடன் சிகரெட் பிடித்துக் கொண்டு ஊரை சுற்றி பொழுது போக்கி வருகிறார்
 
பேஸ் புக் தளத்தில் இருக்கும் பெண்களுக்கு மெசேஜ் அனுப்பி அவர்களை தனது வலைக்குள் விழ வைப்பது இவரது வழக்கம்.
 
அப்போது  மாயவரத்தில் இருக்கும் நாயகி ப்ரீத்தி கரணுடன் பேஸ் புக் மூலமாக பழக்கம்  ஏற்படுகிறது. 
 
ப்ரீத்தி கரணுக்கு பிறந்தநாள் என்பதால் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க தனது நண்பனுடன் பைக்கில் மதுரையில் இருந்து மாயவரத்திற்குச் செல்கிறார் நாயகன்(செந்தூர் பாண்டியன்)
 
நாயகி ப்ரீத்தி கரணுடன் எப்படியாவது உல்லாசமாக இருந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் செல்கிறார் செந்தூர் பாண்டியன். 
 
சென்ற இடத்தில் என்ன என்ன பிரச்சனைகளை சந்தித்தார் அதில் இருந்து எப்படி தப்பித்து வந்தார்  என்பதே படத்தின் மீதிக் கதை.
 
கிராமத்து இளைஞர்களின் கடந்த கால நினைவுகளை தன் கண் முன்னே கொண்டு நிறுத்தியுள்ளார்  இயக்குனர் பிரசாத் ராமர் 
 
நாயகன் செந்தூர் பாண்டியன் மதுரை மண்ணின் உடல் மொழியை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் தனது நடிப்பால்
 
நாயகி ப்ரீத்தி கரண்,கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார்
 
நாயகன் செந்தூர் பாண்டியனின் நண்பர்களாக பலம் வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்
 
உதய் தங்கவேலின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது
 
பிரதீப் குமாரின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் சிறப்பு
 
மொத்தத்தில் "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே"18 வயதுக்கு மேற்ப்பட்டோர் பார்க்க வேண்டிய படம்