திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (09:38 IST)

நயன்தாராவை கட்டியணைத்து காதலர் தினம் கொண்டாடிய விக்கி - வைரல் வீடியோ!

கோலிவுட் சினிமாவின் நட்சத்திர காதல் ஜோடிகளான நயன்தாரா  விக்னேஷ் சிவன் இருவரும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். 
 
விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதனிடையே சமூகவலைத்தளங்களில் ரொமான்ஸை வெளிப்படுத்தும் அவர்கள் தற்போது காதலர் தினம் கொண்டாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். 
 
அதில் நயன்தாரா விக்னேஷ் சிவனை சந்தித்து கட்டியணைத்து காதலை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த வீடியோ சமூகவலைதளவாசிகளின் கவனத்தை வெகுவாக கவர்ந்திழுத்து வைரலாகி வருகிறது.