1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (18:36 IST)

ரைட்ல சமந்தா லெஃப்ட்ல நயன்... விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் டீசர்!

விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

 
விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில், அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லலித் தயாரிக்க ஆரம்பிக்கப்பட்ட படம்தான் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆனாலும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
 
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் டீசர் பிப்ரவரி 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்தார். மேலும் இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும் திரையரங்குகளில் மட்டுமே இந்த படம் வெளியாகும் என்றும் உறுதிபடக் கூறினார்.  
 
இதனிடையே இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் படம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதோ இந்த படத்தின் டீசர்...