நீ என்கிட்ட லவ்வ சொன்னதுல இருந்துதான் வாழ்க்க அழகா மாறிச்சு… ரெண்டு பேர்ட்டயும் ஒரே டயலாக்தான்!
விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில், அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லலித் தயாரிக்க ஆரம்பிக்கப்பட்ட படம்தான் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டாலும், இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
இந்நிலையில் நேற்று இந்த படத்தின் டீசர் இணையத்தில் வெளியானது. நவீன கால முக்கோணக் காதல் கதையாக படத்தை உருவாக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். டீசரில் விஜய் சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரிடமும் ஒரே வசனத்தைப் பேசும் காட்சி அனைவராலும் ரசிக்கப்படுகிறது.