திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: திங்கள், 9 அக்டோபர் 2017 (13:19 IST)

வரலட்சுமிக்கு இவ்வளவு வாய்ப்புகள் கிடைத்தது எப்படி?

வரலட்சுமிக்கு இவ்வளவு வாய்ப்புகள் கிடைத்தது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது.


 

 
2012ஆம் ஆண்டு ரிலீஸான ‘போடா போடி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். அதன்பிறகு விஷால் ஜோடியாக இவர் நடித்த ‘மத கஜ ராஜா’, இன்னும் ரிலீஸாகவில்லை. 4 வருடங்கள் கழித்து கடந்த வருடம் ‘தாரை தப்பட்டை’ ரிலீஸானது. இந்த வருடத்தில் இதுவரை ‘விக்ரம் வேதா’, ‘நிபுணன்’ என இரண்டு படங்கள் ரிலீஸாகியிருக்கின்றன.

‘அம்மாயி’, ‘எச்சரிக்கை’, ‘சண்டக்கோழி 2’, ‘சத்யா’, ‘காதல் மன்னன்’, ‘வர்கம்’, ‘சக்தி’ மற்றும் கார்த்திக் – கெளதம் கார்த்திக் நடிக்கும் படம் என தற்போது வரலட்சுமி கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன. கடந்த 5 வருடங்களில் 2 படங்களில் மட்டுமே நடித்த வரலட்சுமிக்கு, இவ்வளவு வாய்ப்புகள் கிடைத்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.