1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 5 அக்டோபர் 2017 (13:35 IST)

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘சக்தி’ படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘சக்தி’ திரைப்படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

 
நடிகை வரலட்சுமி, விஜய் சேதுபதி-மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது அறிமுக இயக்குநர் பிரியதர்ஷினி இயக்கும் சக்தி என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து  வருகிறார். இந்த திரைப்படத்திற்கான ஃபஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை அதிகாரப்பூர்வமாக வெளியானது.

 
பிரியதர்ஷினி இயக்கத்தில் நடிகை வரலட்சுமி மையக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்துக்கு சக்தி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் வெளிவருகிறது. இதனால் மூன்று மொழிகளுக்கும் உண்டான மூன்று விதமான போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. 
 
இப்படத்தின் இயக்குநர் பிரியதர்ஷினி, மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். இந்த ஃபஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.