திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: சனி, 7 அக்டோபர் 2017 (11:31 IST)

கெளதம் கார்த்திக் படத்தில் வரலட்சுமி

கார்த்திக் – கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படத்தில், வரலட்சுமி நடிக்கிறார்.

 
 
கார்த்திக் – கெளதம் கார்த்திக் முதன்முறையாக இணைந்து நடிக்கும் படத்தை இயக்குகிறார் திரு. அதுவும், படத்திலும் அப்பா –  மகனாகவே இருவரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் ஹீரோயினாக ரெஜினா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், வரலட்சுமியும் இந்தப் படத்தில் நடிப்பதாகத் தெரிவித்துள்ளார் திரு.
 
“என்னுடைய முதல் படமான ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ சமயத்தில் இருந்தே வரலட்சுமியை எனக்குத் தெரியும்.  பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைக்காக இயக்கம் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறார். நேரில் அவர் என்ன கேரக்டரோ, அதேதான் இந்தப் படத்திலும். கதையை எழுதும்போதே அவரை மனதில் வைத்துதான் எழுதினேன். கதையைக் கேட்டதும்  உடனே சம்மதித்து விட்டார்” என்கிறார் திரு.
 
கெளதம் கார்த்திக், ரெஜினா, கார்த்திக், வரலட்சுமி, தமிழ் சினிமா, பொழுதுபோக்கு, Karthik, Gautham Karthik,  Regina, Varalaxmi, Tamil Cinema, Entertainment