மீண்டும் இணையும் 'வணக்கம் சென்னை' ஜோடி

Last Modified செவ்வாய், 16 ஜூலை 2019 (16:17 IST)
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் 'வணக்கம் சென்னை' இந்தத் திரைப்படம் ரசிகர்களால் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இதே ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளது

ஆம் சிவா, பிரியா ஆனந்த் ஆகிய இருவரும் 'சுமோ' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர் இந்த படத்தை எஸ்பி ஹோசிமின் என்பவர் இயக்க உள்ளார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாக உள்ளது

ஜப்பானில் புகழ்பெற்ற சுமோ என்ற விளையாட்டு போட்டியை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட உள்ளது. இந்த படத்தில் உண்மையாகவே 18 சுமோ வீரர்கள் நடிக்க உள்ளனர். மேலும் இந்த படத்தில் யோகிபாபு விடிவிகணேஷ் ஆகியோர் நடிக்க உள்ளதால் இந்த படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் இந்த படத்திற்கான மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் இயக்குநர் எஸ்பி ஹோசிமின் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்


இதில் மேலும் படிக்கவும் :