திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 15 ஜூலை 2019 (12:07 IST)

"வாய் விட்ட சிவகுமார்" - சூர்யா குடும்பத்தை கிண்டலடித்த பிரபல நடிகர்!

தமிழ் சினிமா குடும்பங்களில் சிறந்த குடும்பமாக விளங்கி வருவது நடிகர் சிவகுமார் குடும்பம் தான். அவரது பிள்ளைகள் சூர்யா , கார்த்தி , மருமகள் ஜோதிகா என ஒற்றுமையாக வாழ்ந்து வரும் அவர்கள் பல நேரங்ககளில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் இருந்து வருகின்றனர். 


 
ஆனால் சமீபநாட்களாக நடிகர் சிவகுமார் பல்வேறு சர்ச்சைகளில் தானாகவே சிக்கிக்கொண்டு விமர்சனத்திற்குள்ளாவர். அந்தவகையில் சமீபத்தில் நடிகர் சிவகுமார்...என் பிள்ளைகளாக இருந்தால் டீ , காபி குடிக்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கியிருந்தார். இது பெரும் விமர்சனத்திற்குள்ளானது. 


 
இந்நிலையில் தற்போது அதனை விமர்சித்த நடிகர் எஸ்.வி சேகர்,  காபி.. டீ குடிக்காதீங்க. னால் என் குழந்தைகள் காபி விளம்பரத்தில்  நடிக்கலாம்' என்று கூறி விமர்சித்து ட்வீட் செய்து கிண்டலடித்துள்ளார் எஸ்.வி. சேகர்.