திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 16 செப்டம்பர் 2021 (16:16 IST)

வலிமை டீசர் அப்டேட்… கிளப்பிவிட்ட புண்ணியவான் யாருப்பா!

இன்று நள்ளிரவு வலிமை டீசர் வெளியாகும் என யாரோ கொளுத்திப்போட அது இணையத்தில் பரவி வருகிறது

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கோ அதற்கு முன்போ இந்த படம் ரிலீஸாகலாம் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் தவமாய் தவமிருந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வேற மாரி பாடலை பெற்றனர். இப்போது டீசருக்கான எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் யாரோ ஒருவர் இன்று நள்ளிரவில் வலிமை டீசர் சர்ப்ரைஸாக வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்ல அதை அஜித் ரசிகர்கள் நம்பிக்கொண்டு ட்ரண்ட் செய்து வருகின்றனர். ஆனால் அப்படி எந்த ஒரு தகவலையும் படத்தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கவில்லை.