1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 16 செப்டம்பர் 2021 (15:59 IST)

லாபம் படத்தால் விஜய் சேதுபதிக்கு எவ்வளவு நஷ்டம்! அதிரடி முடிவு!

இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் உருவான லாபம் திரைப்படம் படுதோல்வி அடைந்துள்ளது.

கொரோனா முதல் அலையால் 8 மாதங்களுக்கு மேல் திரையரங்குகள் மூடப்பட்டன. பின்னர் திறக்கப்பட்ட போது பார்வையாளர்களை மறுபடியும் இழுக்கும் விதமாக மாஸ்டர் மற்றும் கர்ணன் ஆகிய படங்கள் ரிலிஸாகின. ஆனால் இரண்டாம் அலைக்குப் பின்னர் திரையரங்குகள் மூடப்பட்டு திறக்கப்பட்டுள்ள நிலையில் அதைப் போன்ற படங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் கடந்த வாரம் விஜய் சேதுபதியின் லாபம் திரைப்படம் வெளியானது. இயக்குனர் எஸ் பி ஜனநாதனின் கடைசி படம் என்பதால் அதன்மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் வசூலும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதுவரை சுமார் 6 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து உள்ளதாம். இதனால் படம் போட்ட பணத்தைக் கூட எடுக்காது என சொல்லப்படுகிறது.

அந்த வகையில் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான விஜய் சேதுபதிக்கு 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இது கிட்டத்தட்ட அவரின் ஒரு பட சம்பளம். எனவே இனிமேல் படத் தயாரிப்பில் ஈடுபட போவதில்லை என்ற முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.